தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பை மருத்துவமனை வளாகத்தில் 132ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் சுரங்கப்பாதை - 200 meter long tunnel

மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனை வளாகத்திற்குள் 132ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் கால சுரங்கப்பாதை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Etv Bharatமும்பை மருத்துவமனை வளாகத்தில் 132  ஆண்டு பழமையான ப்ரிட்டிஷ் சுரங்கப்பாதை
Etv Bharatமும்பை மருத்துவமனை வளாகத்தில் 132 ஆண்டு பழமையான ப்ரிட்டிஷ் சுரங்கப்பாதை

By

Published : Nov 4, 2022, 8:00 PM IST

மும்பை: மும்பையில் உள்ள ஜேஜே அரசு மருத்துவமனையில் 132 ஆண்டுகள் பழமைமிக்க பிரிட்டிஷ் கால சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அலுவலர் கூறுகையில், 'இந்தியாவில் ஆங்கிலேயர் கால கட்டடத்தில் 200 மீட்டர் நீளத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுரங்கப்பாதையில் அடிக்கல்லில் 1880ஆம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனை வளாகத்தில் நீர்க்கசிவு காரணமாக கல்லூரி வளாகத்தை பழுது பார்ப்பவர்கள் ஆய்வு செய்தபோது, மருத்துவமனையின் ஒரு பக்க சுவரின் வழியாக மற்றொரு பாதை தெரிவித்து கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாக அந்த அலுவலர் தெரிவித்தார்.

மும்பையில் உள்ள ஜேஜே அரசு மருத்துவமனை

மேலும் இந்த சுரங்கப்பாதை ஆங்கிலேயர் காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையைச் சேர்ந்த பொறியியலாளர்கள் இந்தக் கட்டடம் 1880இல் கட்டப்பட்டது என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க;மோர்பி பாலம் இடிந்த வழக்கு - நகராட்சி நிர்வாகத்தலைமை அலுவலர் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details