குஜராத்: வதோதரா வத்சர் பகுதியில் உள்ள ஜெய் அம்பே குடியிருப்பில் வசித்து வரும் பெண்ணை ஷாருக் பதான் என்ற இளைஞர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் வீட்டார் வேறு ஒரு நபரை பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், காதலிக்கு திருமணம் செய்து வைத்தாலும் ஆத்திரமடைந்த ஷாருக் பதான் பெண்ணின் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார்.