தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கில் வேலையின்மை: சாராயத்தைப் பதுக்கி விற்ற தொழிலாளி கைது! - uchimedu

புதுச்சேரி: சீல் வைக்கப்பட்டிருக்கும் சாராயக்கடை அருகில் சட்டவிரோதமாக சாராயம் விற்று வந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

puducherry
புதுச்சேரி

By

Published : May 21, 2021, 7:22 AM IST

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே உச்சிமேடு கிராமத்தில் மதுபான விற்பனை நடைபெறுவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கிருமாம்பாக்கம் உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சீல் வைக்கப்பட்டிருக்கும் உச்சிமேடு சாராயக்கடை அருகே பலர் சென்றுவருவதைக் கண்டனர்.

மேலும், கடைக்கு அருகிலே ஒருவர், சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரிக்க அருகில் சென்றனர். போலீஸ் வருவதையும் பார்த்ததும், அங்கிருந்த அனைவரும் ஓடத்தொடங்கினர்.

சாக்கு பையுடன் நின்ற நபரும் தப்பியோட முயன்றார். ஆனால், அந்நபரை காவல் துறையினர் விரட்டி பிடித்தனர். சோதனையில் சாக்கு பையில், சாராயப் பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அந்நபர் அதே பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும், சென்ட்ரிங் தொழிலாளியான இவர் ஊரடங்கில் வேலை எதுவும் கிடைக்காததால் சாராயம் விற்பனை செய்து வந்தததும் தெரியவந்தது.

தொடர்ந்து, அந்நபரை கைது செய்த காவல் துறையினர் சாராயக்கடை அருகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 608 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, சுமார் இரண்டு லட்சம் இருக்கும் எனக் கணக்கிட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details