திஸ்பூர்:அஸ்ஸாம் மாநிலம் போங்கைகான் மாவட்டத்தின் கோல்பாராவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 26) அதே பகுதியில் அல் கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்த மேலும் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். இவரும் 5 நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளார்.
அஸ்ஸாமில் பயங்கரவாத அமைப்பு ஊடுவல்... மேலும் ஒருவர் கைது... - assam terror groups
அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அஸ்ஸாம் மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.
![அஸ்ஸாமில் பயங்கரவாத அமைப்பு ஊடுவல்... மேலும் ஒருவர் கைது... One more suspected member of terror outfit held in Assam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16206142-thumbnail-3x2-l.jpg)
One more suspected member of terror outfit held in Assam
வங்க தேச நாட்டை சேர்ந்த அன்சருள் இஸ்லாம் பயங்கரவாத அமைப்பு அஸ்ஸாம் மாநிலத்தில் ஊடுருவி வருகிறது. இந்த அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் கொய்தா உடன் தொடர்புடையாது. கடந்த மாதம் அஸ்ஸாமில் அன்சருள் இஸ்லாம் அமைப்பை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். அன்றிலிருந்து மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும், கைது செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அம்மாடி... வீட்டிற்குள் புகுந்த 15 அடி நீள ராஜநாகம்... நடுங்க வைக்கும் காணொலி