நாட்டின் குடியரசு நாளான ஜனவரி 26ஆம் தேதி மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையில் டிராக்டர் அணிவகுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. பின்னர், செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள் தங்களது கொடியை ஏற்றினர்.
இந்த வன்முறை தொடர்பாக சண்டிகரைச் சேர்ந்த சுக்தேவ் சிங் (60) என்பவரை டெல்லி காவல் துறையினர் நேற்று (பிப். 7) கைதுசெய்தனர். இவர், விவசாயிகளை வழிநடத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஜனவரி 26ஆம் தேதியன்று நடந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல் துறையினர் இதுவரை 127 பேரை கைதுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி விவசாயிகள் போராட்டம்: சிங்கு, காசிப்பூர், திக்ரியில் மீண்டும் இணைய சேவை முடக்கம்