தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமெரிக்க வர்ஜீனியா கடற்கரையில் துப்பாக்கிச் சூடு - அமெரிக்க வர்ஜீனியா கடற்கரையில் துப்பாக்கிச் சூடு

வாஷிங்டன்: அமெரிக்கா வர்ஜீனியா கடற்கரையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்க வர்ஜீனியா கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்க வர்ஜீனியா கடற்கரையில் துப்பாக்கிச் சூடு

By

Published : Apr 5, 2021, 1:43 PM IST

வர்ஜீனியா கடற்கரையில் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர் என்று காவல் துறையினர் நேற்று (ஏப்ரல் 4) தெரிவித்தனர்.

வர்ஜீனியா கடற்கரை காவல் துறை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சனிக்கிழமை (ஏப்ரல் 3) இரவு 10 மணியளவில் ஹியாவதா 1600 பிளாக்கில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததாகவும், விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரைக் காவல் துறையினர் கண்டுபிடித்ததாகத் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் சம்பவ இடத்தில் இறந்துவிட்டார். மற்ற இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

(மார்ச் 26) அன்று வர்ஜீனியா கடற்கரையில் 'மிகவும் குழப்பமான இரவு' என்று காவல் துறையினர் விவரித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்தப் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இறந்தவர்களில் ஒருவர் 25 வயதான டொனோவோன் லிஞ்ச் ஆவார். அவர் அடையாளம் காணப்படாத ஒரு காவல் அலுவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது குறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது, தற்போதுவரை சந்தேகத்திற்கிடமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மொபைல் தயாரிப்புக்கு டாட்டா சொன்ன எல்ஜி நிறுவனம்

ABOUT THE AUTHOR

...view details