ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா, பாரமுல்லா ஆகிய இரு மாவட்டங்களில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் இன்று (ஜூன் 21) துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பாரமுல்லாவின் சோபோர் நகரில் நடைபெற்ற மோதலில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மூவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை - Tulibal
ஜம்மு காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்று வரும் தேடுதல் வேட்டையில் பயங்கராவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மூவில் 2 இடங்களில் என்கவுன்டர்
சோபோரில் உள்ள துலிபால் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவலை அறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பயங்கரவாதிகள் சுட தொடங்கியதை தொடர்ந்து நடைபெற்ற எதிர் தாக்குதலில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல் துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இரு இடங்களிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
இதையும் படிங்க:3 மாவட்டங்களில் நடந்த என்கவுன்டரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!