மும்பை:கண்டிவலி பகுதியில், நேற்றிரவு (செப் 30) இருசக்கர வாகனத்தில் வந்த சில அடையாளம் தெரியாத நபர்கள், கண்மூடித்தனமாக சாலையில் சென்றுகொண்டிருந்தோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையில் ஈடுபட்டனர். அதில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்களுக்கும், உயிரிழந்த நபருக்கும் இருந்த முன்விரோதமே இந்த அச்சம்பாவிதத்திற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
மும்பை துப்பாகிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு - மும்பையில் துப்பாக்கிச் சூடு
மும்பை கண்டிவலி பகுதியில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூடு
இதில் உயிரிழந்தவர் அங்கித் யாதவ் என்பதும், மற்ற மூவரும் அபினாஷ் தபோல்கர், மணீஷ் குப்தா மற்றும் பிரகாஷ் நாராயண் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மும்பை கண்டிவலி காவல் நிலையப் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் பாபநாசம் பட பாணியில் கொலை - போலீசார் தீவிர விசாரணை