துபாய்: ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது எடிஷன் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலக கோப்பை தொடர் இந்தியாவில் உள்ள 10 நகர மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் முதல் ஆட்டமாக அகமாதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க:உலகமே உற்று நோக்கும் உலக செஸ் கோப்பை: இறுதி யுத்தத்தில் வென்று சாம்பியன் ஆவாரா பிரக்ஞானந்தா?
முன்னதாக ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட முதல் கட்ட அணியை செப்டம்பர் 28ஆம் தேதி முன்னதாக ஒவ்வொறு நாடும் அறிவிக்க வேண்டும் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உலக கோப்பைக்கான மாற்றுதல் பெற்ற அட்டவணையை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது.
இந்நிலையில், பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நேற்று (ஆகஸ்ட். 23) வெளியிட்டு உள்ளது. இந்த பயிற்சி ஆட்டம் ஹைதரபாத், திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய 3 நகரங்களில் நடைபெறுகின்றன. மேலும், எல்லா ஆட்டங்களும் பகல் - இரவு ஆட்டங்களாக நடைபெறுகின்றன. ஆட்டத்தின் போது 15 வீரர்களையும் பயன்படுத்தி கொள்ளலாம் என ஐசிசி தெரிவித்து உள்ளது.