ரயில் மோதி ஒன்றரை வயது புலிக்குட்டி உயிரிழப்பு! - madhya pradesh tiger corona
போபால்: சத்புரா புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த புலிக்குட்டி ஒன்று ரயில் மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புலிக்குட்டி
மத்தியப் பிரதேச மாநிலம், சத்புரா புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதான புலிக்குட்டி மீது ரயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் புலிக்குட்டி உடலை மீட்டனர். இந்தியாவின் புலிகள் மாநிலமாகத் திகழும் மத்தியப் பிரதேசத்தில், கடந்த 19 ஆண்டுகளில் 290க்கும் மேற்பட்ட புலிகள் இறந்துள்ளன. இதில் 5 விழுக்காடு புலிகள் மட்டுமே மனிதர்களின் வேட்டைக்குப் பலியாகிவுள்ளதாக வனத்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.