தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாக்பூரில் கொசு விரட்டி திரவத்தை குடித்த சிறுமி உயிரிழப்பு.. பெற்றோர்களே உஷார்.. - கொசு விரட்டி வகைகள்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கொசு விரட்டியில் இருந்த ரசாயன திரவத்தை குடித்த சிறுமி உயிரிழந்தார்.

நாக்பூரில் கொசு விரட்டி திரவத்தை குடித்த சிறுமி உயிரிழப்பு
நாக்பூரில் கொசு விரட்டி திரவத்தை குடித்த சிறுமி உயிரிழப்பு

By

Published : Feb 14, 2023, 3:55 PM IST

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சக்ரதாரா பகுதியில் கொசு விரட்டியில் இருந்த ரசாயன திரவத்தை குடித்த ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த சுருள் வத்திகள், மின்சாரத்தில் இயங்கும் கொசு விரட்டி திரவ எந்திரம் மற்றும் பேட்டரியில் இயங்கும் கொசு அழிப்பு பேட் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் சுருள் வத்திகள், கொசு விரட்டி திரவ எந்திரம் மிகுந்த உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனிடையே சக்ரதாராவில் வசித்துவரும் தினேஷ் சவுத்ரி என்பவரது ஒன்றரை வயது மகள் ரித்தி சவுத்ரி கொசு விரட்டி திரவத்தை எதிர்பாராத விதமாக குடித்துள்ளார். இதைக்கண்ட தினேஷ் உடனே அதைப் பிடிங்கி கைக்கு எட்டாத இடத்தில் வைத்துள்ளார்.

இதையடுத்து ரித்திக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த தினேஷ் உடனே ரித்தியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமிக்கு சில மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று (பிப். 14) உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர்கள் கவனத்துக்கு: கொசு விரட்டிகளை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தானது. ஆகவே, அனைத்து வகைகயான கொசு விரட்டிகளையும் குழந்தைகள் கண்ணில் படாதவாறு, கைகளுக்கு எட்டாதவாறு வைக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக குழந்தை கொசு விரட்டி திரவத்தை உட்கொண்டுவிட்டால், வீட்டிலேயே மருத்துவம் பார்க்கக்கூடாது.

வாந்தி எடுக்க வைத்தல், வாழைப்பழம் கொடுத்தல் உள்ளிட்டவையை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அந்த நேரத்தில் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தாயின் உடலுடன் ஒரே அறையில் பல நாட்கள் தங்கியிருந்த மகள்

ABOUT THE AUTHOR

...view details