குஜராத் சட்டமன்ற தேர்தல் வ டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
கடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த முறை ஆம் ஆத்மி கட்சி தனது நுழைவை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. எனவே குஜராத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முக்கியமாக குறிப்பிட்ட 19 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 10 சதவீத வாக்குகளைப் பெற்றால், பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பாஜகவின் உள்கட்சி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிலும் குறிப்பிட்ட சதவீதத்திலான வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புவதால், அவர்களை பாஜகவுக்கு வாக்களிக்க வைப்பதற்கான வியூகங்களையும் பாஜகவின் உள்கட்சி ஆய்வு குழு முயற்சித்து வருகிறது. இதுகுறித்து குஜராத் தேர்தல் களத்தின் பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “குஜராத்தில் மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, பாஜக வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டன. இன்னும் அந்த செயல்முறை தொடர்கிறது. மத்தியிலும், குஜராத்திலும் இரட்டை எந்திர ஆட்சி, வளர்ச்சிப் பணிகளில் மேலும் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே குஜராத் மக்கள் புதிதாக நுழைபவர்களோ அல்லது ஆம் ஆத்மி போன்ற கட்சிகளையோ பரிசோதிக்க விரும்ப மாட்டார்கள்” என்றார்.
இதையும் படிங்க:குஜராத் தேர்தல்.. மும்மூர்த்திகளால் பாஜகவுக்கே லாபம்.. ஈடிவி பாரத் தேர்தல் அலசல்..