தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உள்நாட்டு விமானங்களில் உணவு அளிக்க தடை! - உள்நாட்டு விமானங்களில் உணவு அளிப்பதற்கு தடை

கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இரண்டு மணிநேரத்திற்கு குறைவான தூரம் செல்லும் பயணிகளுக்கு விமானங்களில் உணவுகள் வழங்க அனுமதியில்லை என விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று (ஏப்.12) உத்தரவிட்டுள்ளது.

On board meals banned in flights with duration under 2 hours, உள்நாட்டு விமானங்களில் உணவு அளிப்பதற்கு தடை,
On-board meals banned in flights with duration under 2 hours

By

Published : Apr 12, 2021, 6:47 PM IST

டெல்லி: கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்றால் விமான சேவைகள் தடை செய்யப்பட்டது. பின்னர், உள்நாட்டு விமானங்கள் மீண்டும் கடந்த மே 25ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டபோது, சில நிபந்தனைகளின் கீழ் விமான பயணத்தில் உணவு பரிமாற அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த உத்தரவை மாற்றியமைத்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தற்போது கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், இரண்டு மணிநேரத்திற்கு குறைவான தூரம் செல்லும் பயணிக்களுக்கு விமானங்களில் உணவுகள் வழங்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தத் தடை வரும் வியாழக்கிழமை (ஏப்.15) முதல் நடைமுறைக்கு வரும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:சரத் பவாரின் உடல்நிலை குறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details