தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெய்ஹிந்த்- கார்கில் வெற்றி தினம்- தலைவர்கள் மரியாதை! - கார்கில்

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் துருப்புகள் விரட்டியடிக்கப்பட்ட கார்கில் வெற்றி தினம் இன்று.!

Kargil Vijay Diwas
Kargil Vijay Diwas

By

Published : Jul 26, 2021, 11:18 AM IST

டெல்லி: 22ஆவது கார்கில் வெற்றி தினம் நாடு முழுக்க இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கார்கில் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராணுவ அலுவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக கார்கில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள்கள் பயணமாக லடாக், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கு சென்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி

கார்கில் வெற்றி தினத்தில் வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “ கார்கில் வெற்றி தினமான இந்நாளில், நம் தேசத்தை பாதுகாக்க கார்கிலில் வீரமரணம் அடைந்த வீரர்களும் நாம் மரியாதை செலுத்துகிறோம். உங்களின் வீரம் ஒவ்வொரு நாளும் நம்மை தூண்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

முன்னதாக மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியிலும் கார்கில் வீரர்களின் வீர தியாகங்களை நினைவு கூர்ந்திருந்தார்.

குடியரசுத் துணைத் தலைவர்

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “கார்கில் வெற்றி தினத்தில் இந்திய வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வதில் நானும் ஒருவனாக இருக்கிறேன். ஆபரேஷன் விஜய் வீரர்களுக்கு வணக்கம். உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ட்வீட்

ராகுல் காந்தி

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “மூவர்ணக் கொடிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒவ்வொரு வீரருக்கும் எனது அஞ்சலிகள். உங்களின் உயிர் தியாகத்தை, அர்ப்பணிப்பை ஒவ்வொரு நாளும் நினைவில் கொள்வோம். ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி ட்வீட்

மரியாதை

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர்கள் அஜய் பட், ராணுவத் தலைவர் எம்எம் நரவனே, விமான படைத் தலைவர் ஆர்கேஎஸ் பதௌரியா (Bhadauria), கப்பல் படை துணைத் தலைவர் அட்மிரல் அசோக் குமார் உள்ளிட்ட அலுவலர்கள் டெல்லி தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்திய ராணுவம் ட்வீட்

கார்கில் போர்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1999ஆம் ஆண்டு கார்கில் என்ற இடத்தில் மே 3ஆம் தேதி வாக்கில் போர் நடந்தது. 60 நாள்கள் உக்கிரமாக நடைபெற்ற இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. இந்திய எல்லையை ஆக்கிரமிக்க நினைத்த பாகிஸ்தான் துருப்புகள் விரட்டியடிக்கப்பட்டன. பாகிஸ்தான் தரப்பில் பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில் 559 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதையும் படிங்க : கார்கில் வெற்றி கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details