தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு குறைவு - பெருந்தொற்று நிபுணர் விளக்கம் - கோவிட் மூன்றாம் அலை

தடுப்பூசி செலுத்தியவர்களிடம் தொற்று பாதிப்பின் தீவிரத்தன்மை மிகக் குறைவாகவே தென்படுகிறது என பெருந்தொற்று நிபுணரான ரமன் கங்காகேத்கர் தெரிவித்துள்ளார்.

Omicron
Omicron

By

Published : Jan 12, 2022, 6:52 PM IST

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக நாட்டில் கோவிட் மூன்றாம் அலை உருவெடுத்துள்ளது. இந்நிலையில், நாட்டின் முன்னணி பெருந்தொற்று நிபுணரான ரமன் கங்காகேத்கர் இடிவி பாரத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

அதில் நாட்டில் பெருந்தொற்று பரவல் குறித்த தற்போதைய நிலை குறித்து விரிவான கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது, தற்போதைய தரவுகளின்படி ஒமைக்ரான் தொற்றின் வீரியம் குறைவாகவே காணப்படுகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தியவர்களிடம் தொற்று பாதிப்பின் தீவிரத்தன்மை மிகக் குறைவாகவே தென்படுகிறது.

தடுப்பூசி ஒமைக்ரானை முழுமையாக தடுத்துவிடும் என்று கூறமுடியாது. அதேவேளை, தொற்றின் தீவிரம் நிச்சயம் குறையும். தடுப்பூசி செலுத்தியவர்களிடம் அன்டிபாடி எனப்படும் எதிர்ப்பு சக்தி திறன் இருப்பதே இதற்கு காரணம். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், தீவிர மருத்து சிகிச்சைகள் பெரும்பாலும் தேவைப்படாது.

தற்போதைய சூழலில் பெருந்தொற்று பரவல் பெருவாரியான மக்களிடம் இன்னும் காலத்தில் பரவிவிடும். அதை எதிர்கொள்ள நிபுணர்களின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்றார்.

நாடு முழுவதும் இதுவரை 154 கோடியே 53 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், சுமார் 89 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 64 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். சுமார் 26 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:PM security breach: பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு

ABOUT THE AUTHOR

...view details