லேத்போரா பயங்கரவாத சம்பவத்தின் இரண்டாம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், எந்த வித விளக்கமும் அளிக்கப்படாமல் முழு குடும்பத்தையும் வீட்டு காவலில் அடைத்துள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தகவல் வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகான புதிய காஷ்மீர் இது. எந்த வித விளக்கமும் அளிக்கப்படாமல் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். நாடாளுமன்ற உறுப்பினரான எனது தந்தையையும் பின்னர் என்னையும் எங்களது வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள்.
எனது சகோதரி மற்றும் அவரது குழந்தைகள் ஆகியோர் அவர்களது வீட்டில் அடைக்கப்பட்டுள்ளார்கள். புது விதமான ஜனநாயகம் என்பது எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாமல் வீட்டில் அடைத்துவைத்திருப்பது. குறிப்பாக, வீட்டின் பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததன் விளைவு நான் இன்னும் பசியாகவும் சோகமாகவும் உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஸ்ரீநகர் காவல் துறை, "லேத்போரா பயங்கரவாத சம்பவத்தின் இரண்டாம் நினைவு நாள் இன்று. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஐபிக்களின் நடமாட்டத்தை குறைத்துkகொள்ள அறிவுறுத்துகிறோம். இன்று சம்பந்தப்பட்ட அனைவரும் வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுkகொள்கிறோம்" என பதிவிட்டுள்ளது.