தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரயில் விபத்தை தவிர்த்த மூதாட்டி - கர்நாடகாவின் சிங்கப்பெண்! - சிவப்பு நிற துணியை காட்டி ரயில் விபத்து தவிர்ப்பு

விபத்துக்குள்ளாக இருந்த ரயிலை துரிதமாக செயல்பட்டு 70 வயது மூதாட்டி தடுத்து நிறுத்திய சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது.

Karnataka
Karnataka

By

Published : Apr 5, 2023, 6:46 AM IST

மங்களூரு : தண்டவாளத்தில் முறிந்து விழுந்த மரத்தின் மீது மோத இருந்த ரயிலை சிவப்பு நிறக் கொடியை காட்டி துரிதமாக மூதாட்டி மீட்ட சம்பவம் பலரின் பாராட்டுக்களை பெற்று உள்ளது. கடந்த மாதம் 21 ஆம் தேதி நடந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரு மாவட்டம் குடுப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்திராவதி. 70 வயதான சந்திராவதி ரயில்வே தண்டாவளத்தை தாண்டி ஒரு வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 21 ஆம் தேதி மதிய வேளையில் சாப்பிட்ட பின் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக தன் வீட்டு முற்றத்தில் சந்திராவதி அமர்ந்து உள்ளார்.

அபோது ரயில் தண்டவாளம் அருகில் இருந்த மரம் திடீரென முறிந்து தண்டவாளத்தில் விழுந்து உள்ளது. மரம் விழுந்த நேரத்தில், மங்களுருவில் இருந்து மும்பை செல்லும் ரயில் செல்ல இருப்பதை அறிந்து கொண்ட சந்திராவதி, என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்று உள்ளார். வீட்டிற்குள் சென்று தன் உறவினர்களிடம் சந்திராவதி நடந்தவை குறித்து கூறிக் கொண்டு இருந்த நேரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டு உள்ளது.

மேலும் பதற்றத்திற்குள்ளான சந்திராவதி, செய்வதறியாமல் திகைத்து உள்ளார். வீட்டில் இருந்து சிவப்பு நிற துணி இருப்பதை கண்ட சந்திராவதி, உடனடியாக அதை கையில் எடுத்துக் கொண்டு தண்டவாளத்தை நோக்கி ஓடி உள்ளார். ரயில் தூரத்தில் வருவதை கண்ட அவர், துரிதமாக செயல்பட்டு சிவப்பு நிற கொடியை காண்பித்து ரயிலை நிறுத்த முயற்சித்து உள்ளார்.

சிவ நிற கொடி காண்பிக்கப்படுவதை கண்டு ரயிலின் வேகத்தை ஓடுநர் கட்டுப்படுத்தினார். சந்திராவதியின் துரித நடிவடிக்கையால் ரயில் நிறுத்தப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்டு உள்ளூர் மக்கள் உதவியுடன் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அரை மணி நேர தாமதத்திற்கு பின் ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. சந்திராவதியில் துரித நடவடிக்கையால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. சந்திராவதியின் இந்த செயலுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :"ராமநவமி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - மேற்கு வங்க ஆளுநர்!

ABOUT THE AUTHOR

...view details