ஒடிசா:நபரங்பூர் மாவட்டம், முருமதிஹி கிராமத்தில் வசித்து வரும் 21 வயதான பட்டியிலின பெண் திலாபாய், புதன்கிழமையில் இருந்து காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பாப்பாடஹண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை முருமாதிஹி பகுதியில் உள்ள வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் வெட்டப்பட்டு கிடப்பதாக பாப்பாடஹண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து போலீசார் அந்த வனப்பகுதிக்கு விரைந்து சென்று பார்க்கையில் பெண் ஒருவர் 31 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின், விசாரணையில் அந்த பெண் காணாமல் போல திலாபாய் என போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், பட்டியல் சமூக பெண் திலாபாய், கொலை குறித்து பாப்பாடஹண்டி காவல் நிலைய எஸ்டிபிஓ அதித்யா சென் தலமையிலான குழு தீவிர விசாரணை மேற்கொண்டனர். திலாபாயை 31 துண்டுகளாக் வெட்டி கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த தம்பதியினர் என விசாரணையில் தெரிந்த நிலையில் நேற்று (நவ.26) அந்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "முருமதிஹி பகுதியில் வசித்து வரும் சந்திர ராட் என்பவருக்கு திருமணமாகி ஷியா என்ற மணைவி உள்ளார். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக அதே பகுதியை சேர்ந்த 21 வயதான பட்டியிலின பெண் திலாபாயுடன் சந்திர ராட், திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்" என போலீசார் தெரிவித்தனர்.