தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எங்கே போனது உங்கள் கவாச் திட்டம்? ஏன் மக்களை முட்டாளுக்குகிறீர்கள்! காங்கிரஸ் சரமாரி கேள்வி!

தெற்கு ரயில்வேயில் கவாச் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருந்ததுதான் ஒடிசாவின் இந்த கோர விபத்துக்கு காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 3, 2023, 5:46 PM IST

பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோர் என்னும் இடத்தில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்து அரங்கேறி உள்ளது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி தனி குழு ஒன்றை அமைத்து அவர்களுடன் ஆலோசனையும் மேற்கொண்டார். ஆனால் இந்த விபத்திற்கு காரணம் மத்திய அரசின் முறையற்ற திட்ட நடவடிக்கைகள் தான் என காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.

அந்த வகையில் இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு ரயில் தடம் புரண்டு வேறு ரயில் பாதையில் வந்து இப்படி ஒரு விபத்து ஏற்பட்டபோது 'கவாச்' நடைமுறை எங்கே போனது? இந்த விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு யாராவது பொறுப்பு ஏற்பார்களா?” என தெரிவித்து உள்ளார்.

அவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் விவேக் சிங் ட்விட்டரில் "மிஸ்டர் அஸ்வினி வைஷ்ணவ் கவாச் எங்கே? நீங்கள் ஏன் எப்போதும் இந்திய மக்களை முட்டாளாக்குகிறீர்கள்" என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். கவாச் திட்டத்தின் நடைமுறை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கிய வீடியோவையும் அவர் அந்த கேள்விகளுடன் பகிர்ந்து உள்ளார்.

அந்த வீடியோவில், "கவாச் தொழில்நுடபம் பயணத்தின் போது ரயிலின் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டமாகும். இந்த திட்டம் ரயில்வே பாதுகாப்பு நடைமுறையில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வரும். ரயிலுக்கு முறையான சிக்னல் கிடைக்கவில்லை என்றால் அந்த கவாச் நடைமுறையின் கீழ் இருக்கக் கூடிய ரயில் தானாகவே நின்று விடும். இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை குறித்து மக்களுக்கு விளக்கும்” என மத்திய அமைசர் அஸ்வினி வைஷ்ணவ் அந்த வீடியோவில் கூறி இருக்கிறார்.

ஆனால், இந்த விபத்து குறித்தும் கவாச் நடைமுறை குறித்தும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் குறிப்பிட்ட அந்த விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் கவாச் நடைமுறைபடுத்தப்படவில்லை என கூறி உள்ளார்.

ஆனால் கடந்த ஆண்டு இது குறித்து தகவல் அளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், European Train Control System-த்தை தாண்டி தனிப்பட்ட ஒரு சிறப்பான திட்டமாக கவாச் திட்டம் அமையும் எனவும் தெற்கு மத்திய ரயில்வேயில் ஏற்கனவே 1,455 வழித்தடங்களில் 'கவாச்' படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் இது தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், இந்த கோரவிபத்திற்கு மத்திய அரசு பொருப்பேற்குமா எனவும் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலேட் விபத்து குறித்தும் கவாச் திட்டம் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் "ரயில் விபத்தை தவிர்க்கும் கவாச் தொழில்நுட்பம் ஏன் கோரமண்டல் பாதையில் இல்லை?. ஏன் மொத்த இந்திய ரயில் பாதைகளில் 2 சதவீதம் மட்டுமே கவாச் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று பதிவுட்டு உள்ளார்.

இதையும் படிங்க:வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளில் போராட்டம் - வழக்கறிஞர் பகவத்சிங்

ABOUT THE AUTHOR

...view details