தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒடிசாவில் பயங்கர பேருந்து விபத்து! சென்னை வந்து சென்ற சுற்றுலா பயணிகள் காயம்! - odisa ramba side NH-16 highway

ஒடிசாவிற்கு சென்னை வந்து திரும்பி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஒடிசாவில் பயங்கர பேருந்து விபத்து! சென்னை வந்து சென்ற சுற்றுலா பயணிகள் காயம்!
ஒடிசாவில் பயங்கர பேருந்து விபத்து! சென்னை வந்து சென்ற சுற்றுலா பயணிகள் காயம்!

By

Published : Apr 24, 2022, 12:58 PM IST

பெராஹம்பூர்(ஒடிசா):ஒடிசாவில் இருந்து 50 சுற்றுலா பயணிகளுடன் கூடிய பேருந்து ஒன்று தமிழ்நாடு மற்றும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றது. இந்த சுற்றுலா பயணிகள் அவர்களது பயணத்தை முடித்து விட்டு ஒடிசாவிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒடிசாவை நெருங்கியதும் பேருந்து நிலை தடுமாறி விழுந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை NH-16 இல் ரம்பா பகுதிக்கு அருகில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் நேற்று இரவு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காயமடைந்தோரை மீட்டு சத்ராபூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஜீப் மீது டிரக் மோதி கோர விபத்து: 7 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details