தென்கானல்:ஒடிசாவின் கெந்திரபரா மாவட்டத்தில் உள்ள இச்சப்பூர் கிராமத்தில் இருந்து 50 பேர் போலாங்கீர் மற்றும் சாம்பல்பூருக்கு பேருந்தில் சுற்றுலா சென்றிருந்தனர். இந்த பேருந்து தென்கானல் மாவட்டத்தின் சதார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சுபடி அருகில் நேற்றிரவு (ஜனவரி 22) சென்றுகொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இச்சப்பூரைச் சேர்ந்த ரேனுபாலா ஜெனா மற்றும் பிஜயலட்சுமி ஆகிய 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர். இவர்களை போலீசார் மீட்டு தென்கானல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.