தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

70 வயதில் பள்ளி தேர்வெழுதிய ஒடிசா எம்.எல்.ஏ. - அங்கதா கன்ஹர்

ஒடிசா மாநிலம் புல்பானி தொகுதி எம்.எல்.ஏ தனது 70 வது வயதில் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார்.

70 வயதில் பள்ளி தேர்வெழுதிய ஒடிசா  எம்.எல்.ஏ.
70 வயதில் பள்ளி தேர்வெழுதிய ஒடிசா எம்.எல்.ஏ.

By

Published : Apr 30, 2022, 1:01 PM IST

ஒடிசா: புல்பானி தொகுதி எம்.எல்.ஏ அங்கதா கன்ஹர் 1978 இல் பள்ளி படிப்பை நிறுத்தியவர். கல்வி கற்க வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய 70வது வயதில் 10 வகுப்பு உயர்நிலை தேர்வை எழுதியுள்ளார். இதன் மூலம் புதிதாக ஒன்றைக் கற்கவோ அல்லது கல்வி கற்கவோ வயது ஒரு பொருட்டல்ல என்பதற்கு அங்கதா கன்ஹர் சிறந்த ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்.

மாநில தேர்வானையத்தால் (பிஎஸ்இ) நடத்தப்பட்ட இத்தேர்வு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 8 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 5,71,909 மாணவர்கள் 10ம் வகுப்பிற்கான (HSC) தேர்வை எழுதினர். மேலும் 9,378 பேர் மாநில திறந்தநிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வையும், 4,443 பேர் சமஸ்கிருத தேர்வான மத்யமா தேர்வுகளையும் எழுதினர். மொத்தம் 3,540 மையங்களில் நடத்தப்பட்ட இத்தேர்வுகள் மே 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

தேர்வு எழுதிய எம்.எல்.ஏ., அங்கதா கன்ஹர் சட்டமன்ற உறுப்பினரான பின்னும் தொடர்ந்து தனது விவசாய பணிகளை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சு..! பனிக்கட்டிகளை வீசி விளையாடிய மக்கள்..

ABOUT THE AUTHOR

...view details