தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு - Odisha Health Minister

ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 29, 2023, 1:13 PM IST

Updated : Jan 29, 2023, 2:28 PM IST

சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு

புவனேஸ்வர்: ஒடிசாவின் சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மீது அடையாளம் தெரியாத நபர் இன்று (ஜனவரி 29) துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவரது மார்பில் குண்டுகள் பாய்ந்துள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒடிசாவின் ஜார்சுகுரா மாவட்டம் பிரஜ்ராஜ் நகரில் நடக்கவிருந்த விழாவில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.

அப்போது காரை விட்டு கீழே இறங்கும் நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அதன்பின் பாதுகாப்பு அதிகாரிகளும், போலீசாரும் அந்த பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

முதல்கட்ட தகவலில், அவர் மீது 2 குண்டுகள் பாய்ந்துள்ளதும், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஜார்சுகுரா மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க:லால்சௌக்கில் தேசியக் கொடி ஏற்றினார் ராகுல்

Last Updated : Jan 29, 2023, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details