புவனேஸ்வர்: ஒடிசாவில் போக்குவரத்து விதிகளை மீறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஷ், சட்டப்பேரவை உறுப்பினர் ஸ்வரூப் தாஸ் இருவருக்கும் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒடிசாவில் போக்குவரத்து விதியை மீறிய அமைச்சர், எம்எல்ஏவிற்கு அபராதம்
ஒடிசாவில் போக்குவரத்து விதிகளை மீறியதாக பள்ளி மற்றும் கல்வித்துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு பாலசூர் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
ஒடிசா மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஷ் மற்றும் எம்எல்ஏ ஸ்வரூப் தாஸ் இருவரும் நேற்று (ஜூன் 24) பாலசோர் பகுதியில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கு இருசக்கர வாகனத்தின் சென்றனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர். இதனால் பாலசோர் போக்குவரத்துக் காவல்துறையினர் 1,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அப்போது வாகனத்தை ஓட்டி வந்த ஸ்வரூப் தாஸ் அபராதத் தொகையை செலுத்தினார்.
இதையும் படிங்க:குடியரசு தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு! அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்