டெல்லி: G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஒடிசா மில்லட் (தினை) மிஷனின் தூதரான சுபாஷா மஹந்தா நன்றி தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்திலுள்ள சிங்கர்பூர் கிராமத்தைச் சேர்ந்த தினை விவசாயி சுபாஷா மஹந்தா தனக்கு G20 உச்சி மாநாட்டின் மூலம் உலக அளவில் தினையை ஊக்குவிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக தனது மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளார்.
தினை விவசாயி சுபாஷா மஹந்தா கூறும் போது, நான் ஒடிசா மில்லட் மிஷன் தூதராக இருந்தேன். G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் 21 வகையான ராகி வகைகள் பரிசாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருந்தினர்களும் தினை சாகுபடி பற்றி கேட்டறிந்தனர். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தினால் (IARI) தினை சார்ந்த கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
G20 உச்சி மாநாட்டில் தினையால் செய்யப்பட்ட இரண்டு பெரிய ரங்கோலிகள் இடம் பெற்றன. மேலும் இந்த மாநாட்டில் பிரபல சமையல் கலைஞர்களான குணால் கபூர், அனாஹிதா தோண்டி மற்றும் அஜய் சோப்ரா ஆகியோர் தலைமையில் தினையை கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
இதையும் படிங்க:G20 மாநாட்டின் தலைமை பொறுப்பை பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!
மேலும் சுபாஷா மஹந்தா தான் 8 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். நெல் சாகுபடியில் அதிக லாபம் இல்லை. இதனால் 2019ஆம் ஆண்டு முதல் தினை விவசாயத்தை தொடங்கினேன். 9 ரக தினை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன். மேலும் தினை பயிரிட விவசாயிகளை ஊக்குவித்து வருகிறேன். தினை விவசாயத்திற்கு அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. விவசாயிகள் மிக அரிதாகவே தினை பயிரிடுவதால், அதுகுறித்த தகவல்களையும், அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்து வருகிறேன். மேலும் G20 மாநாட்டில் குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எங்களது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரை சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்திய அரசாங்கம் 2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவித்துள்ளது. மேலும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்தியாவின் முன்மொழிவுக்கு 72 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தினை என்பது பொதுவான சொல். தினை என்பது பெரும்பாலான ஊட்டச்சத்து தானியங்களை குறிக்கும் சொல் ஆகும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தினை பயிர்கள் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் கம்பு விவசாயம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
G20 மாநாட்டில் கலந்து கொண்ட ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் மனைவி யோகோ கிஷிடா உள்பட 15 தலைவர்களின் மனைவிகள் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) வளாகத்தில் உள்ள 1200 ஏக்கர் பகுதியில் பசுமைப் புரட்சியின் கீழ் நடைபெறும் விவசாயம் மற்றும் பண்ணைகளை பார்த்து சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:“2030-க்குள் பசிக்கு முற்றுப்புள்ளி” - அடுத்த ஜி20 தலைமையேற்ற பிரேசிலின் 3 முன்னுரிமைகள்!