தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தனக்கு திருமணம் செய்து வையுங்கள்: ஆட்சியரிடம் மனு கொடுத்த மாற்றுத்திறனாளி.!

தனக்கான வாழ்க்கைத் துணையை தேடி திருமணம் செய்து வையுங்கள் என மாற்றுத் திறனாளி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 8, 2023, 12:20 PM IST

ஒடிசா: வாழ்க்கைத் துணை இல்லாமல் பல பிரச்சனைகளைத் தனியாக எதிர்கொண்டு வரும் மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர், ஆங்குல் மாவட்டத்தில் நடைபெற்ற ஆட்சியரின் குறை தீர்ப்பு கூட்டத்தில், தனக்கான வாழ்க்கைத் துணையை தேடிப் பிடித்து திருமணம் செய்து தருமாறு கூறி மனு அளித்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் அரசு அதிகாரிகள் தலைமையில் வாரம் தோறும் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட குறைகள் மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து மனு எழுதி அதிகாரிகளிடம் கொடுத்து தீர்வு காண முயற்சிக்கின்றனர்.

இந்த மனுக்கள் ஆராயப்பட்டு மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், அந்த மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு வருகை தந்த மாற்றுத் திறனாளியான சஞ்சீப் மொஹபத்ரா, தனது வாழ்க்கைத் துணையாக ஒருவரைக் தேடிப் பிடித்து திருமணம் செய்து வைக்குமாறு கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:சாலையில் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கப்பட்ட இளம்பெண்!..குடிபோதையில் வாலிபர் வெறிச்செயல்

மேலும், தனது தாய் மற்றும் தந்தை இருவருக்கும் வயதாகிவிட்ட நிலையில் படுத்த படுக்கையாக இருக்கிறார்கள் எனவும், அவர்களையும் தன்னையும் கவனித்துக் கொள்ளவோ அல்லது தனக்கான பிரச்சனைகள் மற்றும் சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ளவோ யாரும் இன்றி தனிமையில் இருப்பதாகவும், இதனால் தான் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், தனக்கான வாழ்க்கைத் துணையைத் தானும், தனது பெற்றோரும் நீண்ட நாளாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியாத சூழலில், தனது சகோதரரும் தனியாக வசித்து வருகிறார் என குறிப்பிட்டுள்ள அந்த இளைஞர், இந்த சூழலில் தனக்கு ஒரு வாழ்க்கைத் துணை அவசியமாக உள்ளது என, அந்த மனுவின் வாயிலாக முறையிட்டு உள்ளார்.

மாற்றுத்திறனாளியின் இந்த மனுவைப் பார்த்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

ஒருபக்கம் மாவட்ட ஆட்சியரிடம் பெண் பார்க்க சொல்லி மனு கொடுப்பதா? என பலரும் நகைப்பாக நினைத்தாலும், மறுபுறம் வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை அந்த மாற்று திறனாளி இளைஞர் உணர்ந்துள்ளார் எனவும், தனிமை மிக கொடுமையான வலிகளை அவருக்கு கொடுத்திருக்கும் என பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:No-confidence motion: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் - ராகுல் துவக்கி வைப்பு!

ABOUT THE AUTHOR

...view details