தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அந்த 4,561 கோடி ரூபாயை தள்ளுபடி செய்யுங்கள்: மத்திய அரசுக்கு ஒடிசா முதலமைச்சர் கடிதம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் மத்திய ஆயுத காவல் படைகளை நிறுத்தியதற்காக ரூ.4,561 கோடி கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்.

ஒடிசாவில் மத்திய ஆயுத காவல் படைகளை நிறுத்தியதற்காக ரூ.4,561 கோடி கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய
ஒடிசாவில் மத்திய ஆயுத காவல் படைகளை நிறுத்தியதற்காக ரூ.4,561 கோடி கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய

By

Published : Apr 30, 2021, 3:44 PM IST

இதுகுறித்து ஒடிசா முதலமைச்சர் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுவால் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசின் தற்போதைய கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் 2015 ஆகஸ்ட் 25 அன்று எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

எனவே, சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட மாநிலங்களான வடகிழக்கு, ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் தவிர அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் சி.ஏ.பி.எஃப் வீரர்களை நிலைநிறுத்த முழுக் கட்டணங்களையும் ஏற்க வேண்டும்.

இச்சூழலில், நக்சல் வன்முறை பிரச்னை நம் நாட்டின் பல பகுதிகளுக்குப் பரவியுள்ளது என்பதை மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது. இடது தீவிரவாதம் ஒரு தேசிய பிரச்னையாக உள்ளது. அது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்தப் பெரிய சவாலை மத்திய, மாநில அரசுகள் கூட்டாக எதிர்கொள்ள வேண்டும்.

தவிர, ஒடிசா அரசு கடினமான நிதி நிலைமைக்கு மத்தியிலும்கூட பாதுகாப்புப் படைகளை உருவாக்குவதிலும் நிறுத்துவதிலும் அதன் மிகக் குறைந்த வளங்களிலிருந்து செலவழிப்பதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. குறிப்பாக இடது தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக சுமார் 15 பட்டாலியன்ஸ் மாநில காவல் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒடிசாவில் மத்திய ஆயுத காவல் படைகளை நிறுத்தியதற்காக ரூ.4,561 கோடி கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய

இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு மாநில அரசு நிறைய முயற்சிகளை மேற்கொண்டுவருவதைக் கருத்தில்கொண்டு, ஒடிசா போன்ற மாநிலங்களின் சிரமங்களை மத்திய அரசு பாராட்டக்கூடும், அதே நேரத்தில் மத்திய படைகளை நிலைநிறுத்த கட்டணம் வசூலிக்கிறது.

எனவே, இந்த விஷயத்தை தயவுசெய்து மறுபரிசீலனை செய்து, ஒடிசாவில் மத்தியப் படைகளை நிலைநிறுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.4,561 கோடி தொகையைத் தள்ளுபடி செய்யுமாறு உள்துறை அமைச்சகத்திற்கு நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details