ஒடிஷா: ரஷ்யாவைச் சேர்ந்த பாவெல் அன்டோவ் உள்ளிட்ட நான்கு பேர் கடந்த டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒடிஷாவுக்கு வந்தனர். இவர்கள் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி விளாடிமிர் புடானோவ் என்பவர் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் இருதய பிரச்சினை காரணமாக இறந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் கழித்து பாவெல் அன்டோவ் என்பவர் அந்த ஹோட்டலில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். இவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு ரஷ்யர்கள் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம் பாவெல் அன்டோவ் உக்ரைன் போர் தொடர்பாக அவரது சொந்த நாடான ரஷ்யாவை, அதிபர் புதினையும் விமர்சித்து வந்ததாக கூறப்பட்டது. உக்ரைன் போர் குறித்து ரஷ்ய அரசை விமர்சிக்கும் வகையிலான குறுஞ்செய்திகளையும் அவர் பகிர்ந்திருந்தாக கூறப்பட்டது. இதனால், பாவெல் அன்டோவ் மரணம் பேசுபொருளானது.