புபனேஸ்வர்:ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் விடுதியில் தங்கியிருக்கும் பள்ளி மாணவர்கள் 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை தரப்பில், "இந்த பள்ளி மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு கரோனா அறிகுறிகள் இல்லை.
முன்னதாக, இரண்டு மாணவர்களுக்கு தொற்று உறுதியானதையடுத்து மொத்த மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இன்னும் பல மாணவர்களுக்கு தொற்று இருக்கலாம். இதேபோல், ஹடமுனிகுடா விடுதியைச் சேர்ந்த 22 மாணவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பிவ் எடுக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.