தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடல் பாதுகாக்க வேண்டிய பாரம்பரிய பொக்கிஷம் - பிரதமர் மோடி அறிவுறுத்தல் - கடல்சார் வர்த்தகம்

பாரம்பரிய பொக்கிஷமான கடல்வளத்தை பாதுகாக்க வேண்டிய காலமிது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

By

Published : Aug 9, 2021, 7:32 PM IST

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் கடல்சார் பாதுகாப்பைப் பலப்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இம்மாதத்திற்கான தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நமது பாரம்பரிய பொக்கிஷமான கடல்வளத்தை பாதுகாக்க வேண்டிய காலமிது. கடல்கள் முன்னெப்போதும் இல்லாத சவாலை சந்திக்கிறது.

கடல்சார் குற்றங்கள், பயங்கரவாதத்தை தடுக்க உலக நாடுகள் முறையான ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும். கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய ஐந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  • கடல்சார் வர்த்தகத்தை முறைபடுத்த வேண்டும்
  • சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு கடல்சார் மோதல்கள் அமைதிப் பேச்சு மூலம் தீர்க்கவேண்டும்
  • பொறுப்புள்ள கடல்சார் போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும்
  • இயற்கை பேரிடர், பயங்கவாத நடவடிக்கைகளை சர்வதேச அரசுகள் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும்
  • கடல்சார் சுற்றுச்சூழல், வளங்களை பாதுகாக்க வேண்டும்

என ஐந்து ஆலோசனைகளை வழங்கினார். கடல் வளத்தை முறையாக பாதுகாக்கவில்லை என்றால் சர்வதேச பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிடும் என அவர் எச்சரித்தார்.

இதையும் படிங்க:என்.எஸ்.ஓவுடன் எந்த வர்த்தகமும் இல்லை - பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details