தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுமார் 45,000 கி.மீ. கடல் பயணத்தை தொடங்கிய ஐஎன்எஸ்வி தாரிணி கப்பல் - ஐஎன்எஸ்வி தாரிணி பாய்மரக் கப்பல்

ஐஎன்எஸ்வி தாரிணி கப்பலின் சுமார் 45,000 கி.மீ. கடல் பயணத்தை ஐஎன்எஸ் மண்டோவியின் காமாண்டிங் அதிகாரி சஞ்சய் பாண்டா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஐஎன்எஸ்வி தாரிணி கப்பல்
ஐஎன்எஸ்வி தாரிணி கப்பல்

By

Published : Aug 20, 2022, 4:47 PM IST

பனாஜி: கோவாவில் இருந்து மொரிஷியசின் போர்ட் லூயிஸ் வரையிலான கடல் பயணத்தை ஐஎன்எஸ் மண்டோவியின் காமாண்டிங் அதிகாரி சஞ்சய் பாண்டா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஐஎன்எஸ்வி தாரிணி பாய்மரக் கப்பலில் ஆறு பேர் கொண்ட குழு (மூன்று பெண் அதிகாரிகள் உட்பட) பயணத்தை மேற்கொள்கிறது. கிட்டத்தட்ட 2500 கடல் மைல் (சுமார் 45,000 கி.மீ) தூரத்தை 20 - 21 நாட்களுக்குள் கடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் தீவிர வானிலை மற்றும் பருவமழை உள்ளிட்ட மோசமான கடல் நிலைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்தக் கடல் பயணம் கடினமான சாகசம் மிக்கதாகும். இதுபோன்ற பயணங்கள் கடற்படையினர் இடையே சாகச உணர்வை வளர்ப்பதற்கும், ஆபத்தை எதிர்நோக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன.

அதே சமயம் மோசமான கடல் பயணித்தின்போது கப்பல் வழிசெலுத்தல், தகவல் தொடர்பு, என்ஜின்கள் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய கடல்சார் திறன்களை மேம்படுத்துகிறது. இந்திய கடற்படையில் இந்த வகையைச் சேர்ந்த, மஹதேய், தாரிணி, புல்புல், ஹரியால், கடல்புறா, நீலகண்ட் ஆகிய 6 கப்பல்கள் உள்ளன.

இதையும் படிங்க:சீன உளவுக் கப்பல் யுவான் வாங் 5 இலங்கை வந்தடைந்தது

ABOUT THE AUTHOR

...view details