ஹைதராபாத்:உலக அல்சைமர் தினம் இன்று(செப்.21) கொண்டாடப்படுகிறது. எல்லா நோய்களுக்கும் உடல் பருமன் முக்கிய காரணியாக இருக்கும் நிலையில், அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய்க்கும், உடல் பருமன் ஒரு காரணியாக இருப்பதாக மருத்துவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
நரம்பியல் நிபுணர் டாக்டர் ஹரிதா கோகந்தி கூறுகையில், "உடல் பருமன் மூளையின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இது அல்சைமர் நோயின் அறிகுறிகளை அதிகப்படுத்தலாம். அதிக எடை காரணமாக மூளை செல்கள் செயலிழக்கும்" என்று கூறினார்.
அமோர் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணரான டாக்டர் மனோஜ் வாசிரெட்டி கூறும்போது, "உடற்பயிற்சிகள் அல்லது உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது, மூளையின் செயல்பாடுகளை பாதிக்கிறது. மூளையின் செயல்பாடு குறைவது மறதி ஏற்பட வழிவகுக்கும். உடல் பருமன் என்பது நடுத்தர வயது உடையவர்களிடம் பெரிய கவலையாக மாறியுள்ளது" என்று கூறினார்.
மற்றொரு நரம்பியல் நிபுணர் சுரேஷ் ரெட்டி கூறுகையில், "ஒரு நபர் வாழ்நாள் முழுவதும் உடல் பருமனுடன் இருப்பதால், அவரது மூளை செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்படும். அதனால், ஒவ்வொரு நபரும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது முக்கியம். இது அவர்களின் மூளை சரியாக செயல்படுவதை உறுதி செய்யும். அல்சைமர் நோய்க்கு இன்னும் எந்தவித சிகிச்சையும் இல்லை. அதனால் சிறு வயதிலிருந்தே முன்னெச்சரிக்கையாக இருந்தால், அல்சைமர் ஏற்படுவதைத் தடுக்கலாம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 90s கிட்ஸ்களை விட இவர்களுக்குதான் புற்றுநோய் பாதிப்பு அதிகம்