தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணப்பெண் உயிரை பறித்த கரோனா - சோகத்தில் குடும்பத்தினர் - குஜராத் மாநில செய்திகள்

குஜராத்: வல்சாடா பகுதியில் மணப்பெண் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்
குஜராத்

By

Published : Apr 23, 2021, 8:26 AM IST

குஜராத் மாநிலம் வல்சாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் படேல். இவரது மகள் மனிஷா பென் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்று (ஏப்ரல்.23) திருமணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக சில்வாசாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது சிகிச்சைக்காக உயிர் காக்கும் ஊசி தேவைப்பட்டதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் அதைப் பெறுவதற்காகச் சூரத்துக்குச் சென்றனர். ஆனால் அதற்குள் அப்பெண் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மணப்பெண்ணை காவு வாங்கிய கரோனா

திருமணத்திற்கு இரண்டு நாள்கள் முன்பு மணப்பெண் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மனிஷாவின் பெற்றோர் கூறுகையில், “கரோனா வைரஸை யாரும் சாதாரணமாக நினைக்க வேண்டாம். அனைவரும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து கரோனா வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details