தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகருடன் அஜித் தோவல் சந்திப்பு - ஆப்கானிஸ்தான் அரசியல் நிலவரம்

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

Ajit Doval
Ajit Doval

By

Published : Sep 8, 2021, 5:32 PM IST

ஆப்கானிஸ்தானில் தாலிபான் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில், அங்கு நிலவும் சூழல் குறித்து ஆசிய பிராந்தியத்தில் உள்ள அரசுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.

ஆப்கான் தொடர்பாக,இந்தியா - ரஷ்யா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன. அண்மையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் நிக்கோலை பட்ரூஷேவ் டெல்லி வந்துள்ளார். அவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிராந்திய அரசியல், பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

குறிப்பாக, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் நிக்கோலை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா, ரஷ்யா, சீனா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் கூட்டமைப்பான 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:உருளைக்கிழங்கு சாப்பிட மாதம் ரூ.50,000 - உடனே விண்ணப்பிங்க!

ABOUT THE AUTHOR

...view details