தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை சாதனங்கள் பொருத்தும் முகாம் - Rajasthan BJP president Satish Poonia

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை சாதனங்கள் பொருத்தும் முகாம் நடத்தப்படும் என ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - மாடுகளுக்கு தடுப்பூசி முகாம்
பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - மாடுகளுக்கு தடுப்பூசி முகாம்

By

Published : Sep 17, 2022, 7:27 AM IST

ராஜஸ்தான்: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி இன்று நாட்டின் பல்வேறு இடங்களிலும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை 'சேவா பக்வாடா' என பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்படும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வின்போது இரத்த தானம், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை சாதனங்கள் பொருத்தும் நிகழ்வு மற்றும் மாடுகளுக்கு தோல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசி முகாம்கள் ஆகியவை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 72வது பிறந்தநாள்

ABOUT THE AUTHOR

...view details