புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில், பாஜக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிமுக, பாஜகவிற்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் வைத்தியநாதன், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் - Pudhucherry NR Congress
புதுச்சேரி: புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்று (மார்ச் 12) இணைந்தார்.
புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் வைத்தியநாதன்
இந்நிலையில், லாஸ்பேட்டை தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் பரவியது. இதனால் அதிருப்தியில் இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன், இன்று (மார்ச் 12) முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.