புதுச்சேரியில் பாஜக அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இணைவது குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று அக்கூட்டணி உறுதியானது. அதைத்தொடர்ந்து பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அதிமுக இணைந்து வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கிறது.
மொத்தமுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக மற்றும் அதிமுக 14 தொகுதிகளிலும் போட்டியிடுவது என ஒப்புக்கொண்டுள்ளோம். எந்தெந்தத் தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். தேர்தலுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதலமைச்சரை தேர்வு செய்வார்கள்” என்றனர்.