கொச்சி: கேரளாவில் அதிகரித்து வரும் ‘லிவ்-இன்’, சிறிய பிரச்னைகளுக்கு எல்லாம் விவாகரத்து கோருதல் போன்ற நடைமுறைகள் திருமண உறவுகள் ‘Use and Throw’ கலாசாரமாக மாறி வருவதைக்காட்டுகிறது என கொச்சி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணமாகி ஒன்பது ஆண்டுகளான ஒருவர் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை விட்டு விலக, விவாகரத்து கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகமது முஸ்தக் மற்றும் சோபி தாமஸ் அதை நிராகரித்தனர்.
மேலும், திருமணம் மீறிய ஓர் உறவில் ஈடுபட்டு வரும் அந்த நபர், தன் மனைவி மற்றும் குழந்தைகளை விலகி, அந்தப் புனிதமற்ற உறவில் நீடிக்க நீதிமன்றம் உதவி செய்யாது எனவும் தெரிவித்துள்ளனர். தன் தரப்பு வாதத்தை அந்த நபர் வைக்கையில், “2009இல் திருமணமாகி 2018வரை எங்கள் திருமண வாழ்க்கை சுமுகமாகத் தான் போனது.