டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஒப்போ, விவோ, ஜியோமி ஆகிய செல்போன் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மூன்று நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனம் 450 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது. ஜியோமி நிறுவனம் 46 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்துள்ளது. விவோ இந்தியா நிறுவனம் சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ள நிலையில், 62 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது.