புதுச்சேரிகாந்தி நகர் பகுதியில் இன்று (செப்.7) 'பூனை காணவில்லை' என்ற நோட்டீஸை வேளாண் தோட்டத்தைச் சேர்ந்த ராமன் எனும் டீ வியாபாரி ஒட்டியுள்ளார். அதில் "குட்டூ" என அழைக்கப்படும் தனது பூனை கடந்த 3ஆம் தேதி முதல் காணவில்லை என்றும்; இதுகுறித்து தகவல் தெரிவித்தால் பணம் சன்மானமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டு தனது தொலைபேசி எண்ணையும் அவர் இணைத்துள்ளார்.
சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, குட்டியாக இருந்த இப்பூனையை தனது மகள் புதுச்சேரிக்கு கொண்டு வந்து கடந்த 4 ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளார். இதனிடையே வீட்டிற்குள்ளே இருந்த பூனை கடந்த 3ஆம் தேதி முதல் காணாமல்போனது என கவலையுடன் ராமன் மற்றும் அவரது மனைவி சுகந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.