தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"மற்றொரு கொடூரமான ஞாயிறு" - சமந்தாவின் லீவுக்கு நோ சொன்ன பயிற்சியாளர்.. வைரலாகும் இன்ஸ்டா பதிவு! - நடிகை சமந்தாவின் இன்ஸ்டகிராம் பதிவு

Samantha Ruth Prabhu: தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா ரூத் பிரபு, ஞாயிற்றுக்கிழமையான இன்று (அக்.15) உடற் பயிற்சிக்கு விடுமுறை கேட்டு அவரது பயிற்சியாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். விடுப்புக்கு மறுப்பு தெரிவித்து மறைமுகமாக பதிலளித்துள்ளார் சமந்தாவின் பயிற்சியாளர். இந்தப் பதிவை சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தாவின் லீவுக்கு நோ சொன்ன பயிற்ச்சியாளர்
நடிகை சமந்தாவின் லீவுக்கு நோ சொன்ன பயிற்ச்சியாளர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 6:20 PM IST

ஹைதராபாத்:ஞாயிற்றுக்கிழமை லீவ்.. உடம்பு வலி என ஒர்க்-அவுட்டிற்கு ஒரு நாள் லீவு கேட்டதற்கு, நான் வந்துட்டேன்.. என பதிலளித்து லீவ் கொடுக்க முடியாது என நாசுக்காக பதிலளித்துள்ளார் நடிகை சமந்தாவின் பயிற்சியாளர். இந்தப் பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஒர்க்-அவுட் செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கு என இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. தனது நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். தமிழில் இவர் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்த பல்வேறு படங்கள் ஹிட் அடித்தது. சென்னை பல்லாவரத்தில் ஆரம்பித்து இன்று இந்தியா முழுவதும் சிறந்த நட்சத்திரமாக விளங்கிவருகிறார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணமான நான்கு ஆண்டுகளில், விவாகரத்தை அறிவித்தார். பின்னர் அவ்வப்போது சமந்தா, நாக சைதன்யா மீண்டும் இணைதல் குறித்து தகவல்கள் வெளிவந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா அவர் கையில் 'chay' என்ற டாட்டூவை அழித்து சமூக வலைதளத்தில் பரவின தகவல்களுக்கு பதிலளித்தார். இதையடுத்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காதல் கலந்த ஃபேமலி எண்டர்டெயின்மெண்ட் படமாக அமைந்தது.

ஞாயிற்றுக்கிழமை யாருக்குத்தான் சோம்பேறித்தனம் இருக்காது? வார நாட்களிலே நம்மில் பலர் இங்கு பல காரணங்களைச் சொல்லி நம் வேலைகளுக்கு ரெஸ்ட் கொடுக்கிறோம். வார விடுமுறையில் எல்லாருக்கும் வரும் சோம்பேறித்தனம் என்பது இயல்பு தானே.

நடிகை சமந்தாவின் லீவுக்கு நோ சொன்ன பயிற்ச்சியாளர்

அதுபோல தான் சமந்தாவும் உணர்ந்திருப்பாரோ என்னவோ, ஒர்க்-அவுட்டிற்கு இன்று ஒரு நாள் மட்டும் லீவ் வேண்டும் என அவரது ஜிம் பயிற்சியாளர் ஜுனைத்திடம் கேட்க, அவரோ சமந்தாவின் குறுஞ்செய்திகளை பார்த்துவிட்டு ஹாய்...நான் வந்துவிட்டேன்... என பதிலளித்துள்ளார். மேலும் இன்று லீவ் கிடையாது பயிற்சிக்கு கட்டாயம் வருமாறு நடிகை சமந்தாவுக்கு நாசுக்காக பதிலளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து அடுத்தப் பதிவில், பிரைட் இளஞ்சிவப்பு நிற பயிற்சி உடையில், இன்றைய பயிற்சியின் போது புல்-அப்ஸ் எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் வேண்டாவெறுப்பாக செய்வது போல் முகப்பாவனைகளை கொண்டிருந்தார். இதுமட்டுமின்றி, மற்றொரு கொடூரமான ஞாயிற்றுக்கிழமை (just another brutal sunday) என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தது, ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் சமந்தா டாப் நடிகையாக இருந்தாலும், அவரது பாட்சா அவரது பயிற்சியாளரிடம் பழிக்கவில்லை என்று பலரும் அவரின் பதிவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை சமந்தாவின் லீவுக்கு நோ சொன்ன பயிற்ச்சியாளர்

முன்னதாக அவர் சிட்டாடலின் (Citadel) என்ற படத்தில் அவர் கமிட் ஆகி இருந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நடிப்பிற்கு சில காலம் ரெஸ்ட் கொடுக்கபோவதாக அறிவித்தார். பின்னர் உடல் நலத்தில் சற்று முன்னேற்றம் இருந்ததால், மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் சமந்தா. தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் சிட்டாடல் அப்டேட்ஸ்க்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:லியோ வசூலில் பங்கு சம்பந்தமான பேச்சுவார்த்தை நீட்டிப்பு - டிக்கெட் முன்பதிவில் தாமதம்!

ABOUT THE AUTHOR

...view details