பெங்களூரு:கர்நாடகாவின் முதன் முதலில் தேசிய விருது பெற்ற பாடகரான சிவ்மொகா சுப்பண்ணா நேற்று பெங்களூரில் உள்ள மருத்துவமனையயில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 83 . முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிவ்மொகா அவரது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர் கன்னட திரையுலகில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். கன்னட திரையுலகில் பாடலுக்காக முதலில் தேசிய விருது பெற்ற பெருமை உடையவர். கன்னட படமான ‘காடு குட்ரே’ படத்தில் ‘காடு குட்ரே ஒடி பந்திதா’ பாடலை பாடியதற்காக விருது பெற்றார்.