தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Babasaheb Purandare: பத்ம விபூஷண் விருது பெற்ற வரலாற்று ஆசிரியர் பாபாசாஹேப் காலமானார் - Babasaheb Purandare

மகாராஷ்டிராவைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் பாபாசாஹேப் புரந்தரே(Babasaheb Purandare) உடல்நலக்குறைவால் காலமானார்.

பத்ம விபூஷண்
பத்ம விபூஷண்

By

Published : Nov 15, 2021, 2:26 PM IST

நாட்டின் முன்னணி வரலாற்று ஆய்வாளரும், பத்ம பூஷண்(Padma Vibhushan) விருது பெற்றவருமான பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே இன்று காலமானார். பாபாசாஹேப் என பிரபலமாக அழைக்கப்படும் இவர் புனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

கடந்தவராம் இவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இவரது உடல்நிலை மோசமடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப்பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பாபாசாஹேப்பிற்கு அஞ்சலி

1922ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி பிறந்த புரந்தரே, மகாராஷ்டிரா குறித்தும், சத்ரபதி சிவாஜி(Chhatrapati Shivaji) குறித்தும் 900 பக்கங்கள் கொண்ட பெரிய வரலாற்று நூலை எழுதியுள்ளார். இவருக்கு 2019ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கப்பட்டது.

பாபாசாஹேப் புரந்தரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். "பாபாசாஹேப் தனது படைப்புகள் மூலம் தொடர்ந்து நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார். இந்த நேரத்தில் அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்" எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Delhi air pollution: முழு லாக்டவுனுக்கு தயார் - நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு

ABOUT THE AUTHOR

...view details