கர்நாடகா:பரவலாக அறியப்படும்சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் டி.வி.கிரிஷ் பயணித்த ஜீப்பை எட்டு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, அவரையும் அவரது நண்பரையும் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கிரிஷ் அவருடைய நண்பர், நண்பரின் மகள் இருவருடனும் செப்டம்பர் 30ஆம் தேதி கர்நாடகாவிலிருக்கும் சாந்தவேரிக்கு ஜீப்பில் பயணித்த்துள்ளார். அப்போது, குடிபோதையில் இருந்த எட்டு இளைஞர்கள் அவர்களை சூழ்ந்து, கிரிஷின் நண்பருடைய மகளிடம் ஆபாசமாகப் பேசி, பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிரிஷும் அவரது நண்பரும் அக்கும்பலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, உடனடியாக அந்த இடத்தை விட்டுக் கிளம்பினர். எனினும், அவர்களை விடாத அக்கும்பல், தங்கள் இருசக்கர வாகனங்களை எடுத்துகொண்டு ஜீப்பினை விரட்டிச் சென்று மீண்டும் வழிமறித்துள்ளனர்.
தொடர்ந்து, எதிர்பாராவிதமாக கிரிஷ், அவரது நண்பர் இருவரையும் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்ட மூவரையும் அந்தக் கும்பலிடமிருந்து போராடி மீட்டுள்ளனர்.
புகழ்பெற்ற சூழலியல் செயற்பாட்டாளரான டி.வி.கிரிஷை தாக்கும் போதை ஆசாமிகள் தற்போது தாக்குதல் நடத்திய எட்டுபேர் கொண்ட கும்பலை, சிக்மகளூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.