தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனைவியுடன் கட்டாய உறவு சட்டவிரோதமல்ல - நீதிமன்றம்

மனைவியைக் கட்டாயப்படுத்தி கணவன் உடலுறவில் ஈடுபடுவது சட்டவிரோதம் இல்லை என மும்பை மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

not-illegal-for-husband-to-force-wife-to-have-sex-mumbai-sessions-court
மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் உடலுறவில் ஈடுபடுவது சட்டவிரோதம் அல்ல!

By

Published : Aug 14, 2021, 12:51 AM IST

மும்பை:தனக்கு விருப்பமில்லாமல், கட்டாயப்படுத்தி தன் கணவர் உடலுறவில் ஈடுபட்டதாக மும்பை மாவட்ட நீதிமன்றத்தில், பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில்,"எனக்கும் என் இணையருக்கும், நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. இருவரும் ஜனவரி 2ஆம் தேதி சுற்றுலா சென்றிருந்த போது என்னுடைய விருப்பம் இல்லாமல் எனது கணவர் என்னுடன் உறவு கொண்டார். அப்போது, எனது இடுப்புக்கு கீழே செயலிழந்து மருத்துவ சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கில், தனது கணவர், அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி, வழக்கு தெடார்ந்த பெண்ணுடைய கணவர் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை எனக் கூறி அப்பெண்ணின் கணவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அப்பெண் மருத்துவ சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது துரதிஷ்டமானது என்றும் இவ்வழக்கில் பெண்ணின் கணவரை காவலில் எடுத்து விசாரணை செய்யவேண்டிய தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பாலியல் சீண்டல்.. இளைஞருக்கு பாடம் புகட்டிய அஸ்ஸாம் ஜான்சி ராணி!

ABOUT THE AUTHOR

...view details