டெல்லி:ஜம்மு காஷ்மீர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் தனது 52 ஆண்டு பிணைப்பை முறித்துக்கொண்டு, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அதன்பின் ஜனநாயக ஆசாத் என்ற கட்சியை தொடங்கினார். இதனிடையே ஆசாத் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, தான் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதில்லை என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இத்தகைய வதந்திகளை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு சிலர் பரப்பி வருகின்றனர் எனவும், அவர்களது தனது ஆதவாளர்களை திசை திருப்பும் வகையில் இவ்வாறு செய்து வருவதாகம் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.