புதுச்சேரி:இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,362 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 66 பேர் உயிரிழந்தனர். 9,620 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,98,095 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 178 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த இரண்டு வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாக புதுச்சேரியில் நேற்று ஒருவர் கூட கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.