டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேறிய விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை (மார்ச் 26) குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து அவர், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை என்னிடமும் பார்க்க கூறினார்கள். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். கடந்த 8 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு பண்டிட் குடும்பத்தையாவது பாஜக காஷ்மீரில் மறுகுடியமர்த்தியதா?. இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது” என்றார்.
தொடர்ந்து, தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை வலையொளியில் (யூ-ட்யூப்) பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார். இது குறித்து கெஜ்ரிவால், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை யூடியூப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அதில் கிடைக்கும் பணம் காஷ்மீரி பண்டிட்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும்” என்றார்.