தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலகம் சுற்றும் வாலிபர்களே உஷார்.. கிரெடிட் கார்டுகள் ஜாக்கிரதை! - பஞ்சாப் மாநில செய்திகள்

பஞ்சாபில் சைக்கிளில் உலகம் சுற்றி வரும் நார்வே நாட்டைச் சேர்ந்தவரின் கிரெடிட் கார்டுகளை வழிப்பறி செய்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

உலகம் சுற்றும் வாலிபர்களே உஷார்.. கிரெடிட் கார்டுகள் வழிப்பறி!
உலகம் சுற்றும் வாலிபர்களே உஷார்.. கிரெடிட் கார்டுகள் வழிப்பறி!

By

Published : Dec 14, 2022, 1:41 PM IST

Updated : Dec 14, 2022, 1:56 PM IST

லூதியானா:பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோதி நகர் காவல் நிலையத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், “என்னுடைய பெயர் எஸ்பின் (Espin). நான் நார்வே நாட்டைச் சேர்ந்தவன். நான் சைக்கிளில் உலகம் முழுவதும் சுற்றி வருகிறேன்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் நான் வந்து கொண்டிருந்தேன். அப்போது பைக்கில் வந்த சில நபர்கள் எனது மொபைல் போனை பறித்துச் சென்றனர். நான் சைக்கிளில் சென்றதால் என்னால் அவர்களை துரத்தி பிடிக்க முடியவில்லை. அதில் என்னுடைய கிரெடிட் கார்டுகள் உள்ளது. எனவே எனக்கு உதவ வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து கிரெடிட் கார்டுகளுடன் கூடிய மொபைல் போனை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஒற்றைக் காலில் 2 லட்சம் கி.மீ. சைக்கிள் பயணம்... மாற்றுத்திறனாளி டாக்டர் சாதனை...

Last Updated : Dec 14, 2022, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details