தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கார்கில் வெற்றி தினம்- ராணுவ வீரர்கள் பைக் பயணம்!

கார்கில் வெற்றி தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்திய ராணுவத் தளபதி (வடக்கு) உதம்பூர்- கார்கில் வரை 527 கிலோ மீட்டர் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.

Army Commander undertake over 400 Kms bike ride to Kargil
Kargil

By

Published : Jul 23, 2021, 12:43 PM IST

உதம்பூர் : கார்கில் போரின் 22ஆவது வெற்றி தினம் கடந்தாண்டு கோவிட் பரவல் காரணமாக கொண்டாடப்படவில்லை.

இந்நிலையில் இந்தாண்டு கார்கில் போரில் உயிரிழந்த இந்திய வீரர்கள் 527 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய ராணுவத் தளபதி (வடக்கு) சக ராணுவ வீரர்களுடன் உதம்பூர்- கார்கில் வரை 527 கிலோ மீட்டர் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.

இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய இந்திய ராணுவத் தளபதி (வடக்கு) யோகேஷ் குமார் கூறுகையில், “இந்திய இராணுவத்தின் துணிச்சலான வீரர்கள் செய்த தியாகங்கள் அங்கீகரிக்கப்படுவது மட்டுமல்லாமல் நினைவுகூரப்படுவதும் மிக முக்கியம்.

நாட்டின் தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாக இது அமையும். ஆகவே, இன்று, நம்முடைய இந்த முயற்சி (நாங்கள் மேற்கொண்டுள்ள மோட்டார் சைக்கிள் பேரணி) கார்கில் போரின் போது உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவுகள், இளைஞர்களிடையே தேசபக்தி உணர்வை வளர்க்கும்” என்றார்.

கார்கில் வெற்றி தினம்

தொடர்ந்து கார்கில் போரை நினைவு கூர்ந்த அவர், "ஜூலை 7 ஆம் தேதி, நான் ஒரு சுகோய் ஜெட் விமானத்தில் பாத்ரா உச்சியில் பறந்தேன்.

என் தளபதிகளில் ஒருவரான கேப்டன் விக்ரம் பாத்ரா தனது உயிரைக் கொடுத்த நாள் இன்று. வீரர்களின் தியாகம் என்றென்றும் நினைவு கூரப்படும்” என்றார்.

கார்கில் வெற்றி தினமான ஜூலை 26ஆம் தேதியன்று நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார். அப்போது அவர் போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

முன்னதாக 2019ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஸ்ரீநகரில் இருந்து லே செல்லும் வழியில் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : கார்கில் நாயகனுக்கு 2ஆம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details